2025 மார்ச் 31, திங்கட்கிழமை

”பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்துகள் செல்லுபடியாகாது”

Simrith   / 2025 மார்ச் 27 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாரியப்பொலவில் இலங்கை விமானப்படையின் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்துகள் செல்லுபடியாகாது என்பதை எடுத்துரைத்த முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், அமைச்சர் விமானப்படையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். 

முன்னாள் துணை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அண்மையில் இலங்கை விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் விமானிகளின் தவறுதான் என்று கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானது. 

இதுபோன்ற ஒரு நிகழ்வின் போது விமான விபத்து குறித்து விசாரிக்க ஒரு விசாரணை நீதிமன்றம் நியமிக்கப்பட வேண்டும். விமானிகள் விபத்தில் இருந்து தப்பித்தால், அவர்களிடம் இருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்பட வேண்டும். பின்னர் விசாரணை அறிக்கை விமானப்படை தளபதியிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அது பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும். பாதுகாப்பு அமைச்சகம்தான் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும். அந்த வகையில் விமான போக்குவரத்து அமைச்சரின் அறிக்கை பொருத்தமற்றது. 

எனவே, விமானப் போக்குவரத்து அமைச்சர், தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக இலங்கை விமானப்படையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

என முன்னாள் துணை அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X