2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் சிக்கினார்

Freelancer   / 2025 மார்ச் 10 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் நேற்று (09) பிற்பகல் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை, கந்தேகெதர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

குறித்த சந்தேக நபர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை ஏமாற்றி, கவர்ச்சிகரமான வட்டிக்கு பணம் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து, சுமார் 4.5 மில்லியன் ரூபாவைப் பெற்று, பணத்தை செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .