Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 பெப்ரவரி 15 , மு.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைத்திருந்த சந்தேநபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் பக்கற்றுகளை கொடுத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு பேரும், எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கலஹாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஏழு பேரும், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில், புதன்கிழமை (14) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, மேலதிக நீதவான் தரங்கா மஹாவத்த மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் குழுவினரே, கலஹா, தெல்தோட்டை கிரேட்வெளி தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து, ஏழு பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில், ஐந்து ஆண்களும், பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்.
கொழும்பு, ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் உள்ள கூண்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பால் பாக்கெட்டுகளில் சயனைட் விஷம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர், பால் பாக்கெட்டுகளை கொள்வனவு செய்வது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சிக்கியுள்ளன.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பால் பாக்கெட்டை வழங்கியதையடுத்து, அவற்றை குடித்த இருவரும் மயங்கிவிட்டனர். ஆபத்தான நிலையில்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜிந்துபிட்டி பிரதேசத்தில் ஜனவரி 24 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது, அங்கு வந்திருந்த ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
4 hours ago
5 hours ago