Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 02 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி. பரந்தன் முல்லைத்தீவு ஏ- 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது
இவ்வாறு மீட்கப்பட்ட இரண்டு சடலங்களையும் மீட்கப்பட்ட இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்மாத் ஜெமில்
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்
அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் இறந்தவர்களிடமிருந்து 71, 100ஆயிரத்து நூறு ரூபாய் பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்ட பாலத்தின் உட்பகுதியில் விழுந்ததன் காரணமாக இருவரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ஜெய்க்கா வீட்டுத்திட்டம் இக்பால் நகர் நிலாவளி பகுதியைச் சேர்ந்த அன்ரன் சாந்தன் (23 வயது) அதே பகுதியைச் சேர்ந்த சசிகரன் சிம்புரதன் (வயது 21) ஆகிய இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago