2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

பாராளுமன்ற ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை?

S.Renuka   / 2025 மார்ச் 30 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய சம்பள திருத்தங்களின் கீழ் அனைத்து பாராளுமன்ற ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் 70 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாகக் குறைக்கப்பட்டதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் ஊழியர்கள் வலுவான தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்ற ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் அவர்கள் ஏற்கெனவே பாராளுமன்றத் தலைவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலதிக நேர ஊதியம் மற்றும் சம்பள முரண்பாடுகள் இல்லாததால், முந்தைய பல அரசாங்கங்கள் சிறிது காலமாக பாராளுமன்ற ஊழியர்களுக்கு இந்த சிறப்புக் கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டம் நடத்த பாராளுமன்ற ஊழியர்களும் தயாராகி வருவதாகத் தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X