2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பாப்பரசரை நேரில் சந்தித்தார் பேராயர்

Editorial   / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நேரில் சந்தித்துப்  பேசினார்.

இந்தச் சந்திப்பு வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, திருத்தந்தை பரிசுத்த பாப்பரசருக்கு இதன்போது தெளிவுபடுத்தினார் என்று அறியமுடிந்தது. (K)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .