2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பாடசாலைகளுக்கு விடுமுறை; கல்வி அமைச்சு திடீர் அறிவிப்பு

Freelancer   / 2022 ஜூன் 18 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் இதை அறிவித்துள்ளார்..

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணையவழியாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு புறநகர்ப் பகுதிகள், வெளிமாவட்ட நகர எல்லைகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்கள் பாடசாலைகளை மூடுவதா அல்லது இணைய முறையில் செயல்படுவதா என்பதை அடுத்த வாரம் முடிவு செய்யலாம்.

மேலும், கிராமிய பாடசாலைகளின் செயற்பாடுகள் குறித்த தீர்மானம் அதிபர்களின் தீர்மானங்களை பொறுத்தே அமையும் என்றும் கல்வி அமைச்சு செயலாளர் தெரிவித்தார்.(R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X