2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

’பாடங்களை நீக்குவது முட்டாள்தனம்’

Freelancer   / 2024 ஜூலை 24 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தின்படி தகவல் மற்றும் தொடர்பாடல்  தொழில்நுட்பம், அழகியல் பாடங்களை நீக்குவது முட்டாள்தனமான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23)  விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

2006 ஆம் ஆண்டில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட தகவல் மற்றும் தொடர்பாடல்  தொழில்நுட்பம் என்ற பாடம், முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தில் பரீட்சை திணைக்களத்தால் மதிப்பிடப்பட்ட 7 முக்கிய பாடங்களுக்குள் உள்ளடக்கப்படவில்லை. இலங்கையை டிஜிட்டல் இலங்கையாக உருவாக்கும் நோக்கில் செயற்படும் இவ்வேளையில், இவ்வாறான முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கக் கூடாது  

முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தின்படி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற பாடத்தை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பாடங்களில் ஒன்றாக அதனை உள்ளடக்குவதில்லை என தீர்மானித்துள்ளனர்  

மாறிவரும் தொழில்நுட்ப யுகம் உருவாகியுள்ள இவ்வேளையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம் என்ற பாடம் உள்ளடக்கப்பட வேண்டும்.

அவ்வாறே அழகியல் பாடத்தையும் நீக்கியுள்ளனர். எனவே இந்தப் பாடங்களை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் முட்டாள்தனமான செயல்  எனவே இது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X