2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பஹல்​காமில் தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் கண்டுபிடிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீரின் பஹல்​காமில் தாக்குதல் நடத்திய தீவிர​வா​தி​களுக்கு உள்​ளூரில் உள்ள காஷ்மீர் ஆதர​வாளர்​கள் (காஷ்மீரி ஓவர்​கிர​வுண்ட் ஒர்க்​கர்ஸ் - ஓஜிடபிள்​யூ) உதவி செய்​துள்​ளதை புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள் கண்​டு​பிடித்​துள்​ளனர்.

தீவிர​வா​தி​கள் தங்​கு​வதற்கு இடம், உணவு போன்ற வசதி​களை செய்து கொடுப்​பவர்​களை ஓவர்​கிர​வுண்ட் ஒர்க்​கர்ஸ் என்று அழைக்​கின்​றனர். இதுகுறித்து புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள் நேற்று குறிப்பிடுகையில்,

பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களுக்கு உள்​ளூர் ஆதர​வாளர்​கள் 15 பேர் உதவியது எலக்ட்​ரானிக் கருவி​களை ஆய்வு செய்த போது தெரிய வந்​தது.

அவர்​களில் முக்​கிய குற்​ற​வாளி​களாக 5 பேர் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளனர். அவர்​களில் 3 பேர் பிடிபட்​டுள்​ளனர். மற்ற 2 பேரை தீவிர​மாக தேடி வரு​கிறோம். தாக்​குதல் நடந்த 22 ஆம் திகதி வரை அவர்​களு​டைய தொலைபேசிகள் உட்பட இலத்திரனியல் கருவி​கள் இயங்​கி​யுள்​ளன. அதன்​பிறகு அவை அணைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும் மற்ற 10 பேரிடம் என்​.ஐ.ஏ, காஷ்மீர் பொலிஸ், புல​னாய்வு பிரிவு, ரோ போன்ற அமைப்​பினர் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​கள் இன்​னும் பஹல்​காம் பகு​தி​யில் அடர்ந்த வனப்​பகு​தி​யில் பதுங்​கி​யிருக்​கலாம் என்று சந்​தேகிக்​கிறோம். எனவே, வனப்​பகு​தி​யில் தீவிர தேடு​தல் வேட்டை நடத்​தப்​பட்டு வரு​கிறது என்று தெரி​வித்​தனர். 

இதற்​கிடை​யில், தாக்​குதல் நடந்த கடந்த 6 நாட்​களில் 10 தீவிர​வா​தி​களின் வீடு​களை இந்திய பாது​காப்​புப்​ படை​யினர்​ இடித்​து தரைமட்​ட​மாக்​கி உள்​ளனர்​. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X