Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 மார்ச் 07 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மெதவாச்சி பகுதியில் தனியார் பஸ்ஸொன்று, சாரதியின் கவனக்குறைவால் அருகிலிருந்த வீட்டின் கராஜ் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து மெதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் பஸ்ஸின் சாரதி திடீரென சுகயீனமடைந்ததால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் மெதவாச்சியிலுள்ள வீடொன்றுடன் கூடிய கராஜ் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 6 பேர் சிறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, படுகாயமடைந்த 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த தனியார் பஸ் வவுனியாவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்றதாகவும், விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் சுமார் 40 பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago