2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பஸ்-ஓட்டோ விபத்தில் இருவர் பலி

Editorial   / 2023 செப்டெம்பர் 24 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல்- தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை தனியார் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

  விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தற்போதைய ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

  உயிரிழந்த இருவரின் சடலங்கள் கலேவெல பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த பெண் ஒருவரும் மற்றுமோர் ஆண் மற்றும் 6 வயது சிறுவன் ஒருவரும் கலேவெல வைத்தியசாலையில் இருந்து தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .