2025 மார்ச் 18, செவ்வாய்க்கிழமை

பஸ் விபத்தில் 13 பேர் காயம்

S.Renuka   / 2025 மார்ச் 17 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-புத்தளம் வீதியில் பட்டுலுஓயா பகுதியில் திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பெர் காயமடைந்த நிலையில், சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

நிக்கவெரட்டியவிலிருந்து அதிகம மற்றும் கீரியன்கல்லிய வழியாக கொழும்புக்கு தினமும் இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் முன்பக்க துணு உடைந்ததால், கட்டுபாட்டை இழந்து  பாதையை விட்டு விலகி அருகிலிருந்த கடை மற்றும் ஒரு மரத்தின் மீது மோதியுள்ளது. 

இந்த விபத்தில் பேருந்து சாரதி , நடத்துநர் மற்றும் 11 பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X