2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது

Freelancer   / 2025 ஏப்ரல் 18 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பிலேயே பிள்ளையானின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. R
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X