2024 நவம்பர் 27, புதன்கிழமை

’பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்’

Freelancer   / 2024 நவம்பர் 27 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்த்ததாகக் கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோர்களால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

தமது பிள்ளைகளை உடனடியாக மீட்டுத் தருமாறு ஆளுநரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கரவெட்டி, முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோர்களே ஆளுநர் செயலகத்தில் நேற்று  (27) ஆளுநரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனையடுத்து, ஆளுநர் உடனடியாக வெளிவிவகார அமைச்சின் செயலாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தைத் தெரியப்படுத்தினார்.  

அத்துடன், பெற்றோர்களிடம் அவர்களது விவரங்களைப் பெற்று வெளிவிவகார அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .