2025 மார்ச் 18, செவ்வாய்க்கிழமை

பொல்துவ சந்தியில் போராட்டம் நடத்த தடை

Simrith   / 2025 மார்ச் 17 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லையில் உள்ள பொல்துவ சந்தியைச் சுற்றி இன்று முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வரை போராட்டங்களை நடத்துவதைத் தடைசெய்து கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் மற்றும் அடையாள வேலைநிறுத்தங்கள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடுவதை இந்த நீதிமன்ற உத்தரவு தடுக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X