2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 18 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

வேதியியல் பேராசிரியரான இவர், களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார். இவர் 1997ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 

அத்துடன், சமையல் எண்ணெய்களின் இரசாயன மற்றும் ஊட்டச்சத்து பண்புகள் குறித்து பல ஆராய்ச்சிகளை நடத்திய ஒரு முக்கிய பேராசிரியரும் ஆவார்.

சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, இதுவரை களனி பல்கலைக்கழகத்தின் முதுகலை பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.(AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .