2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

போலி பூச்சிக்கொல்லி சிக்கியது

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்து, 40 இலட்சம் ரூபாய்  பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் யக்கல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்  
 
போலி பூச்சிக்கொல்லிகள் விற்பனை மற்றும் மோசடி தொடர்பாக யக்கல காவல் நிலையத்தில்   செய்யப்பட்ட புகாரின் பேரில், தேடப்படும் சந்தேக நபர் ஒருவர்  கடுகண்ணாவ பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், யக்கல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு,  சந்தேக நபரைக் கைது செய்தது.
 
சந்தேக நபர் கம்பஹா, கிடகம்முல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
 
சந்தேக நபர், கரையான்கள் மற்றும் பிற பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொருளைக் கொண்ட கொள்கலன்களில் அச்சிட்டு போலி பூச்சிக்கொல்லியை விநியோகித்தது தெரியவந்துள்ளது. 
 
கிரியெல்ல, களனி, பமுனுகம, அவிசாவளை, ரம்புக்கனை, மல்வத்து ஹிரிபிட்டிய, கண்டி, வாதுவ, கொச்சிக்கடை, சபுகஸ்கந்த, தலாத்துஓயா, மொரட்டுமுல்ல, மாவத்தகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் போலியான பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X