2024 டிசெம்பர் 20, வெள்ளிக்கிழமை

’பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குக’

Freelancer   / 2024 டிசெம்பர் 20 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது எனவும் இலங்கை தொடர்பான தீர்மானங்களைப் பிரேரிக்கும் மையக் குழு நாடுகளிடம் இந்தத் தரமுயர்த்தலை நாம் வேண்டி நிற்கின்றோம் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும்  கனேடிய வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் உள்ளிட்ட கனேடிய அரசியல் தரப்பினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (19) கனடா – ஒட்டாவாவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கனேடிய பிரதி அமைச்சரிடம் எழுத்து மூல கோரிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .