2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

’பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம்’

Freelancer   / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்சியொன்றின் கீழ் மக்கள் ஊழல் இல்லாதவர்கள், மக்களுக்கு  பொறுப்புக்கூறக்கூடியவர்கள், நேர்மையானவர்கள், அனைவரையும் உள்ளீர்க்க கூடியவர்கள், நீதி நியாயத்தோடு நடக்கக் கூடியவர்களை எதிர்பார்க்கிறார்கள். புதிதாக ஒன்றைச் செய்யும், நாட்டுக்கு நேர்மையையும், கூறுவதை செவிமெடுக்கும், மனித நேயம் மிக்கவர்களை எதிர்பார்க்கின்றனர். சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை நிராகரித்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், திறம்பட்ட  சேவையை ஆற்றுவோரை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு மக்கள் எதிர்பார்க்கும் இதற்கு மிகவும் பொருத்தமான நபரை ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபைக்கு முன்னுறித்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாளிகாவத்தை Grand Zenith வரவேற்பு மண்டபத்தில் நேற்று (02) நடந்த “மகிழ்ச்சியுடன் கூடிய கொழும்பு நகருக்கு” எனும் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் வைத்திய கலாநிதி றுவைஸ் ஹனிபாவின் கொள்கை ஆவணத்தை  வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு குறிப்பிட்ட வர்த்தகக் குழுவின் மாதிரியாக நடந்து கொள்ளும் பொம்மை அரசியல்வாதிகளைக் கொண்ட அரசியல் இயக்கம் அல்ல. எனவே நாம் எமது பலவீனங்களை சரிசெய்து பலத்தோடு முன்னோக்கிப் பயணிப்போம். நாட்டு மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X