2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

பரீட்சைக்கு சென்ற மாணவன் திடீர் மரணம்

Editorial   / 2025 ஜனவரி 17 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் , கற்பிட்டி - பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடைபெறும் மூன்றாம் தவணை பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவன் உடல் நலக்குறைவு காரணமாக வௌ்ளிக்கிழமை(16) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயரிழந்துள்ளான்.

பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த மபாஸ் முஹம்மது மஷாப் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில்  நடைபெறவிருந்த செயல்முறை திறன் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக குறித்த மாணவன் பாடசாலைக்குச் சென்றுள்ளான் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, ஆஸ்மதுமா (வீசிங்) எனும் நோயினால் அவதிப்பட்டு வந்த குறித்த மாணவன் , பாடசாலைக்கு வருகை தந்த பின்னர் திடீரென வீசிங் நோயால் அவதிப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, குறித்த மாணவன் வீசிங் நோய்க்காக பயன்படுத்தும் இன்ஹேலர் எனும் இயந்திரத்தை பாவித்துள்ள போதிலும், தனக்கு மூச்சு எடுப்பதற்கு சிரமமாக உள்ளதாக அந்த மாணவன் ஆசிரியை ஒருவரிடம் கூறியுள்ளான் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் குறித்த மாணவனை மாம்புரி கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அந்த மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக தற்போது புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X