2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பரீட்சை தொடர்பான அவசர அறிவித்தல்

Freelancer   / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 (2022) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கு தோற்ற விரும்பும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் நாளையுடன் (17) முடிவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

முன்னதாக, பெப்ரவரி 3 மற்றும் 10 ஆம் திகதிகளில் இரண்டு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையுடன் (17) வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ திறன்பேசி செயலியான "DoE" க்குச் சென்று விண்ணப்பத்தை ஒன்லைனில் சமர்ப்பிக்கும் முன் உரிய வழிமுறைகளை கவனமாக வாசிக்குமாறு பரீட்சார்த்திகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .