2025 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை

பாராளுமன்ற குழுக்களில் எதிர்க்கட்சியினர் அதிகரிப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 23 , மு.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
 
நேற்று நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
அதற்கமைய, அரசாங்கம் இந்த விடயத்தை நேர்மறையாகப் பரிசீலித்து உடனடியாக தமது முடிவை அறிவிக்கும் என சபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் கலந்துகொண்டார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X