2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

பிரபல பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக வழக்கு

Freelancer   / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 பல்பொருள் அங்காடிகள் நேற்று (01) சோதனை செய்யப்பட்டன. 

இதில், காலாவதியான பொருட்கள் தொடர்பிலும், விலைகளைக் காட்சிப்படுத்தாதமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துதல், பொருட்களில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற மீறல்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 

மேற்கூறிய சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில், சுமார் 16 நிறுவனங்கள் நன்கு அறியப்பட்ட பல்பொருள் அங்காடி வலையமைப்புகளாக செயல்படும் நிறுவனங்கள் என்று கூறப்படுகிறது. 

அதன்படி, பல்பொருள் அங்காடிகள் உட்பட சந்தையில் இருந்து பொருட்களை வாங்கும் போது காலாவதி திகதி மற்றும் பிற தகவல்களை தொடர்ந்து சரிபார்க்குமாறு நுகர்வோரை அதிகாரசபை வலியுறுத்துகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X