2025 ஜனவரி 22, புதன்கிழமை

ப்ரௌன்ஸ்வீக் தீ விபத்தில் 4 வீடுகளுக்கு சேதம்

Freelancer   / 2025 ஜனவரி 22 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட ப்ரௌன்ஸ்வீக் தோட்ட  பிரிவில் இலக்கம் ஒன்று தொடர் குடியிருப்பில் நேற்று (21) இரவு 9 மணிக்கு  தீ விபத்து இடம் பெற்றுள்ளது.

இத் தீ பரவலின் போது நான்கு குடியிருப்பு சேதமடைந்துள்ளதாக   மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

ஏனைய 12 குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் தோட்ட மக்கள் மற்றும் மஸ்கெலியா பொலிஸார் போராடி  தடுத்து நிறுத்தி உள்ளனர்.

16 விடுகளை கொண்ட தொடர் குடியிருப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது 

அந்த 16 குடியிருப்பு பகுதியில் இருந்த மக்கள் தங்களது உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X