2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

பேருந்து ஆசன முன்பதிவு தற்காலிக இடைநிறுத்தம்

S.Renuka   / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான பேருந்து  ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதனைத்தவிர, பயணிகள் சேவை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்கத்தில் பேருந்துகள் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சாரதியொருவரின் கடமை நேரம் 14 மணித்தியாலங்களுக்கு மேற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மற்றுமொரு சாரதியை பணிக்கமர்த்த வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட சுற்றுலாப் பயணங்களுக்கு ஈடுபடுத்துவதும் புத்தாண்டு காலப்பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X