2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

பிரதமர் அலுவலக மேலதிக செயலாளராக அஷ்ரப்...

Janu   / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் அலுவலகத்திற்கு இலங்கை நிர்வாக சேவையின் 05 விசேட தர மேலதிக செயலாளர் பதவிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 03 பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான பசுமை காலநிலை நிதியத்தின் முகாமைத்துவ நிபுணராகப் பணிபுரிகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி எம்.பீ.எம்.அஷ்ரப் , குறித்த பதவி வெற்றிடமாகவுள்ள மேலதிக செயலாளர் பதவிக்கு நிமிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X