2024 நவம்பர் 14, வியாழக்கிழமை

பயணக் கட்டுப்பாட்டை வாபஸ் பெற்றது அமெரிக்கா

Freelancer   / 2024 நவம்பர் 14 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறுகம்பே பிரதேசத்துக்கான சுற்றுலா தொடர்பில் அமெரிக்கா விடுத்திருந்த பயண கட்டுப்பாடு ஆலோசனை மீளப்  பெறப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

 கடந்த 23ஆம் திகதியன்று, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், “மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு  அமெரிக்கப் பிரஜைகளைக் கேட்டுக் கொள்கிறது” என்று, பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியது.

இந்நிலையில், இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப் பெறுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம், வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்திருந்தது.  

இதையடுத்து, அறுகம்பே பிரதேசத்துக்கான சுற்றுலா தொடர்பில் அமெரிக்கா விடுத்திருந்த பயண கட்டுப்பாடு ஆலோசனை மீளப்  பெறப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.AN

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .