2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 25 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசபந்து தென்னக்கோன் தனது பதவியை  துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழுவொன்றைப் பரிந்துரைக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

குறித்த விசாரணைக்குழு இரண்டாவது தடவையாக இன்றையதினம் (25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

அத்துடன், இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர் சட்டமாஅதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்கால விசாரணைச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது தொடர்பில் இன்றையதினம் கூடிய விசாரணைக்குழு கலந்துரையாடியது.

எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்கு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கும் இக்குழு முடிவு செய்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .