2025 மார்ச் 04, செவ்வாய்க்கிழமை

புதிய விமானப்படைத் தளபதி நியமனம்

S.Renuka   / 2025 மார்ச் 04 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் எல்.எச்.லசித சுமனவீர ( L.H.Sumanaweera) நியமிக்கப்பட்டுள்ளார்.

முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீரவின் நியமனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அதன்படி, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க, செவ்வாய்க்கிழமை (04)  அன்று எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீரவிடம் நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார். 

எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, 1991ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்தவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .