2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

புதிய துணைத் தலைவராக பரத் அருள்சாமி நியமனம்

Simrith   / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் முக்கிய பங்காளியுமான ஜனநாயக மக்கள் முன்னணி, கட்சியின் புதிய துணைத் தலைவராக பரத் அருள்சாமியை நியமித்துள்ளது.

கட்சியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற அரசியல் குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுச்செயலாளர் முருகேசு பரணிதரன், துணைத் தலைவர் சசிக்குமார், நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், கட்சியின் முன்னேற்றம் மற்றும் உத்திகள் குறித்து ஆய்வு செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X