2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

புத்தாண்டில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

Freelancer   / 2025 ஏப்ரல் 04 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் , 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும் உள்ள மதுவரி திணைக்களத்தின் பதிவைப்பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது . 

மேலும், 13 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை, சுற்றுலா அதிகார சபையின் அனுமதி பெற்ற விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுபானம் , போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பான குற்றங்கள் தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் 1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடளிக்குமாறு மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது . R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X