2025 ஜனவரி 17, வெள்ளிக்கிழமை

போதிசத்வா குறித்து CID சட்ட ஆலோசனை நாடுகிறது

Simrith   / 2025 ஜனவரி 16 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்த மதத்தை அவமதித்து மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தன்னைத் தானே அவலோகிதேஸ்வர போதிசத்வா என்று அறிவித்துக் கொண்ட மகிந்த கொடித்துவக்குவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபருக்கு எதிரான எதிர்கால சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிரான வழக்கை தொடர முடியுமா என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் வழக்கை நடத்த முடியாது என சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிலுபுலி லங்காபுர நீதவானிடம் தெரிவித்தார். சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மருத்துவ அறிக்கைகள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

பௌத்த மதத்தை அவமதித்த மற்றும் மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் மஹிந்த கொடித்துவக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு ஜூன் 18ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .