2024 நவம்பர் 13, புதன்கிழமை

பாதுகாப்பு பணியில் இம்முறை 90,000 பேர்

Freelancer   / 2024 நவம்பர் 11 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக 90,000 பாதுகாப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
 
இக்குழுவில் 63,145 பொலிஸ் அதிகாரிகள், 3,200 விசேட அதிரடிப்படை அதிகாரிகள், தேவைக்கு ஏற்ப பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுவர். 11,000 இராணுவத்தினர் மற்றும் நடமாடும் பாதுகாப்பு சேவை உள்ளிட்ட பாதுகாப்பு சேவைகளுக்காக 12,227 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளடங்குவதாக நிஹால் தல்துவ தெரிவித்தார். 
 
தேர்தலுக்குப் பிந்தைய பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் 3,109 நடமாடும் ரோந்து படையினரும் 269 வீதித் தடைகளும் 241 கலவர எதிர்ப்புக் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்ட உள்ளதாகவும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .