2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில் ஆபாச வார்த்தைகள்

Simrith   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இன்று வியாழக்கிழமை தகாத மற்றும் முகஞ்சுழிக்கத்தக்க வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

நிகழ்நிலையில் பரவி வரும் ஒரு ஸ்கிரீன்ஷொட்டில், அமைச்சக செயலாளர் தொடர்பான அமைச்சக தகவல்களைக் காண்பிக்கும் ஒரு பிரிவின் கீழ் ஆபாசமான மற்றும் தகாத வார்த்தைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வார்த்தைப் பிரயோகம் இருப்பதால், வலைத்தளம் வெளிப்புறத் தரப்புகளால் ஊடுருவப்பட்டு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்த விடயத்தில் அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை, ஆனால் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் விசாரணை மற்றும் உடனடி திருத்தத்தின் அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .