2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

பண்டிகை காலத்தையொட்டி விசேட சோதனை

Freelancer   / 2024 நவம்பர் 22 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகள் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய சுற்றிவளைப்புகளுக்காக, மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக, சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை இந்தச் சோதனைகள் தொடரும் எனவும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை காட்சிப்படுத்துவதில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் வாடிக்கையாளர்கள் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.AN


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X