2025 பெப்ரவரி 21, வெள்ளிக்கிழமை

பெண்களுக்கு ஆபாச படங்கள், பாலியல் வீடியோக்களை அனுப்பிய நபர்

Freelancer   / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது Whatsapp கணக்கைப் பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள், பாலியல் வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பி பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடமத்திய மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பெண்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களைப் பழுதுபார்க்க ஒரு மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்திற்கு சென்றபோது, ​​உரிமையாளர் அவர்களின் தொலைபேசி எண்களைப் பெற்று இவ்வாறு நடந்து கொண்டமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது. 

சந்தேக நபர் அனுராதபுரம், பந்துலகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர் இன்று (18) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X