2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை

பெண் அதிகாரிகளின் அறைக்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்

Freelancer   / 2025 ஜனவரி 03 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் அதிகாலையில் பிரவேசித்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நுரைச்சோலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அண்மையில பொலிஸில் இணைந்து கொண்ட பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (2ம் திகதி) நுரைச்சோலை பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருந்த இடத்திற்குள் ஒருவர் நுழைந்துள்ளதாக நிலையத் தளபதிக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் கல்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X