2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை

பட்டாசு கொளுத்தியவர் வைத்தியசாலை அனுமதி

Janu   / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற மகிழ்ச்சியில் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த நபரொருவர் தீ காயங்களுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர் .

ஹொரண இலிப கொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு தீ காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

குறித்த நபர் பட்டாசு கொளுத்தி சிறிது நேரத்தின் பின்னரும்  அது வெடிக்காததால், அருகில் சென்று சோதனையிட்டு பார்த்தபோது திடீரென பட்டாசு வெடித்துள்ளதுடன் இதனால் அவரது வலது கை மணிக்கட்டு உட்பட உடலின் பல பாகங்களில் பலத்த தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஹொரண ஆதார வைத்தியசாலையின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X