2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

’பங்களாதேஷில் பத்திரமாய் உள்ளனர்’

Freelancer   / 2024 ஜூலை 24 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  பாதிப்புகள் ஏற்படும் நிலை காணப்பட்டால் அவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   செவ்வாய்க்கிழமை (23)  வாய்மூல விடை க்கான வினா நேரத்தில் அரச தரப்பு எம்.பி. யான  ராஜிகா விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்
 
பங்களாதேஷில் 2835 இலங்கையர்கள் தொழில் மற்றும் தொழிற் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.அங்கு கல்வி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ள இலங்கை மாணவர்களின் சரியான எண்ணிக்கையை உடனடியாக தெரிவிக்க முடியாதுள்ளது.

எவ்வாறெனினும் அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம்.அவர் வழங்கிய தகவல்களின்படி இலங்கையர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X