2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், திபெத்தில் நிலநடுக்கம்

J.A. George   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், திபெத் ஆகிய நாடுகளில் ஒரே நாள் காலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.58 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக  நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

120 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இன்று காலை  4.53 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

193 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இதேவேளை, சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக உள்ள திபெத்தில் காலை 5.49 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கிலோமீற்றர்  ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X