2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நிற கற்களால் ஏமாற்றிய முதிய ஜோடி கைது

Editorial   / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறான நிறங்களைக் கொண்ட கற்களை, மாணிக்கக் கற்கள் என காண்பித்து,  பலரை ஏமாற்றிய குற்றஞ்சாட்டின் கீழ் தேடப்பட்டுவந்த முதிய ஜோடி, ஹொர​ண நகரில் சுற்றித் திரிந்த நிலையில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.  சந்தேகநபர்களிடமிருந்து 10 கிராம் ​ஹெரோய்ன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், நாட்டின் பல பாகங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆவர் என்று  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரான பெண், படபொல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவர் எனவும், சந்தேகநபர் மத்தல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு சந்தேக நபர்களிடமிருந்து  வெவ்வேறு போலி கற்களும் கைப்பற்றப்பட்டன.

இவ்விரு சந்தேகநபர்களின் மோசடியில் சிக்கிய நால்வர் ஹொரண பொலிஸில் ஏற்கெனவே முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .