2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நிர்வாணத்தை விற்ற இளம் பெண் கைது

Editorial   / 2023 ஒக்டோபர் 05 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணமான அழகான பெண்ணொருவர் தனது நிர்வாணத்தை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த இளம் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக  விசாரணையில் தெரியவந்துள்ளது.

பத்து நிமிடம் நிர்வாணமாக காட்சியளித்ததற்காக 2,000 ரூபாவும் ஒரு மணி நேரத்திற்கு 8,000 ரூபாவும் முழு நிர்வாணமாக காட்சியளித்ததற்காக இருமடங்கு பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பெண்ணின் நிர்வாண படங்களை இணையத்தில் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் என்பதும், இந்த நிர்வாண படங்களும் காட்சிகளும் அவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

தனியார் வகுப்புகளுக்காக பெற்றோர் கொடுத்த பணத்தை இந்த பெண்ணின் நிர்வாண வீடியோக்களையும் படங்களையும் பார்ப்பதற்கு அந்த மாணவர்கள் செலவு செய்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்தின் கீழ் பணம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .