2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

நாயை சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரி கைது

Janu   / 2024 ஒக்டோபர் 30 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பக்கத்து வீட்டாரின் வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்த நாயின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கந்தானை பொல்பிட்டிமுகலான பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய   ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாயை சுட பயன்படுத்திய துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாய், சந்தேக நபரின் வீட்டின் முன் உயிரிழந்து  கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன்  இரவு நேரங்களில் வீட்டின் முன் வந்து  குரைப்பதால் நாய் சுட்டுக் கொல்லப்பட்டது என விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X