2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

நள்ளிரவு முதல் அனைத்துக்கும் தடை

Freelancer   / 2024 நவம்பர் 19 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

19ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 2024 கல்விப் பொதுத்தராதர உயர்த்தர  பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் போன்றவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில், மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் போன்றவற்றை நடத்துவதுடன், பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை அச்சிடல் மற்றும் விநியோகித்தல், பரீட்சைத் தாள்களின் வினாக்கள் வழங்கப்படும் என்றோ அல்லது அதற்கு சமமான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், பிரசுரங்கள், மின்னணு அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல் அல்லது வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

யாரேனும் ஒருவர், நிறுவனம் அல்லது சில தரப்பினர் இந்த உத்தரவை மீறினால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.   R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X