Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 01 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்து மாவட்டங்களில் உள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கை வர்த்தக அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அம்பாறை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள நெல் மற்றும் அரிசி இருப்புக்கள் பற்றிய தரவுகள் இதில் அடங்கும்
எவ்வாறாயினும், ஏனைய மாவட்டங்களில் உள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்பு குறித்த அறிக்கைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த மாவட்டங்களில் உள்ள நெல், அரிசி இருப்பு கணக்கிடும் பணி ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. இதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. (AN)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago