Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 15, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 14 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழை காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கம் மற்றும் லுணுகம்வெஹெர நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளதனால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர் திலான் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மானிக்க கங்கை மற்றும் கிரிந்தி ஓயாவின் நீர் மட்டம் உயரக் கூடும் எனவும், நீராடுவதையும், நீர்த்தேக்கங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும், கரையோரங்களில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
வெஹெரகல நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் தலா மூன்று அங்குலங்கள் திறக்கப்பட்டு நொடிக்கு 500 கன அடி வீதம் மெனிக் கங்கைக்கு விடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்திற்கு வெளியில் இன்று (14ஆம் திகதி) காலை முதல் தலா எட்டு அங்குல வான் கதவுகளும் தலா நான்கு அங்குலம் கொண்ட இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும், வினாடிக்கு சுமார் 3000 கன அடி வீதம் கிரிந்தியோவுக்கு விடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
14 Jan 2025
14 Jan 2025