Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 04, சனிக்கிழமை
Simrith / 2025 ஜனவரி 01 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 ஆம் ஆண்டு 'அரகலய' காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும், ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், அது தன்னை ஒரு பாதகமான நிலைக்கு தள்ளியதாகவும் நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி (சிடிஎஸ்) ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று வலியுறுத்தினார்.
இலங்கையின் 8வது சி.டி.எஸ்., ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் செயலில் சேவையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா 2022 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 8ஆவது பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.
ஜெனரல் சில்வா இலங்கை இராணுவத்தில் 40 வருடங்களுக்கும் மேலான களங்கமற்ற, புகழ்பெற்ற மற்றும் வெற்றிகரமான சேவையை நிறைவு செய்துள்ளதுடன் இலங்கை இராணுவத்தின் பதில் பாதுகாப்புப் படைத் தளபதியாகவும் 23 ஆவது தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
" நான் 2022 மே 31 அன்று ஓய்வு பெறுவதற்கு ஏழு மாதங்கள் எஞ்சியிருந்தன. எனினும், அதிகாரிகள் என்னை உத்தியோகபூர்வமாக இராணுவத் தளபதி பதவியில் இருந்து பாதுகாப்பு படைகளின் பிரதானியாக மாற்றினர்.
சில நாட்களின் பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்ததுடன், அந்த நேரத்தில் நான் அரசாங்கத்தின் அனுமதியுடன் CDS ஆக வெளிநாட்டில் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டேன் இருந்தேன்" என்று ஜெனரல் சில்வா தனது பிரியாவிடை செய்தியில் கூறினார்.
“2022 போராட்டம் ஒரு உள்நாட்டுக் கலவரம். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச ராணுவ பலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நான் உத்தரவு பிறப்பித்தேன். நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தும் இரக்கமற்ற கொலைகாரனாக மாற எனக்கு விருப்பமில்லை. எனது நோக்கங்கள் மோசமானவை அல்லது தீயவை அல்ல, அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர்கள் கூறுவது போல் நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை. ஒரு அந்நிய நாட்டுக்கு சிப்பாயாக அல்லது வெளிநாட்டு தூதரகத்தில் கைப்பொம்மையாக இருக்க வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு இல்லை. அப்படியென்றால் அப்போதைய பிரதமர் போராட்டகாரர்களிடம் சிக்கியபோது, அவரைப் பத்திரமாக மீட்க நான் ஏன் ஏர் மொபைல் படைப்பிரிவை அனுப்ப வேண்டும்? என்று கேட்டார்.
2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதிகள், தனது ஒழுக்கம் மற்றும் சட்டத்தை மதிக்கும் சேவையை அங்கீகரித்து இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான பிரதி ஆலோசகராக தன்னை நியமித்ததாக ஜெனரல் சில்வா தனது பிரியாவிடையில் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
32 minute ago
40 minute ago