2025 ஜனவரி 09, வியாழக்கிழமை

நண்பரின் பாதத்தை துண்டாடியவர் கைது

Editorial   / 2025 ஜனவரி 08 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து தனது நண்பரின் பாதத்தை வெட்டி துண்டாடியதாக  கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை, பின்வத்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபரும் சந்தேக நபரும் பின்வத்த புகையிரதப் பாதைக்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், நீண்ட நேர உரையாடலுக்குப் பின்னர் அவர் காலிலும் தோளிலும் மன்னா கத்தியால் தாக்கப்பட்டதாகவும்  விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலின் பின்னர், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மன்னா கத்தி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், காயமடைந்த நபர் பாணந்துறை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X