2025 ஜனவரி 27, திங்கட்கிழமை

நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷண் விருது

Freelancer   / 2025 ஜனவரி 26 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமி, கலைத் துறையில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 139 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 7 பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம விபூஷண் விருதுகள், 113 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 23 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

பத்ம விருதுகளைப் பொறுத்தவரையில், இம்முறை தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் பெறுகின்றனர். அந்த வகையில், தமிழக தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமிக்கும், கலைத் துறையில் நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகை சோபானா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X