2025 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை

நாடு கடத்தப்பட்ட ’நாரஹேன்பிட்ட அமிலவுக்கு’ விளக்கமறியல்

Editorial   / 2025 பெப்ரவரி 22 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் குழுவைச் சேர்ந்தவராகக் கூறப்படும் அமில சந்திரானந்த எனப்படும் நாரஹேன்பிட்ட அமிலாவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா உத்தரவிட்டார். இந்திய புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவை மேலதிக நீதவான் பிறப்பித்துள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் சந்தேக நபரின் தொடர்புகள் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், சந்தேக நபருக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X